மதுக்கரை மரப்பாலம் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றம்
ADDED :395 days ago
கோவை; மதுக்கரை மரப்பாலம் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது.
கோவை; கோவை, மதுக்கரை பகுதியில் மலை மேல் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை, பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு அலங்காரத்துடன் தீப ஒளியில் ஜொலித்த சிவபெருமான் மற்றும் நந்தி பகவானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து கார்த்திகை தீபத்தையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.