உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோவில்களில் மார்கழி முதல் நாள் வழிபாடு; பக்தர்கள் தரிசனம்

கோவை கோவில்களில் மார்கழி முதல் நாள் வழிபாடு; பக்தர்கள் தரிசனம்

கோவை; மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கோவை கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


தமிழ் மார்கழி மாதம் முதல் தேதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர்  மற்றும் ஆண்டாள் சந்நிதியில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி பூதேவி தாயருடன் கரி வரதராஜ பெருமாள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அருள் பாலித்தார்.  ஆண்டாள் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள் மற்றும் பெருமாளின் தரிசனம்பெற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !