தென்கரை பாலசாஸ்தா கோயிலில் லட்சர்ச்சணை விழா
ADDED :301 days ago
பெரியகுளம்; பெரியகுளம் தென்கரை பாலசாஸ்தா கோயிலில் லட்சர்ச்சணை நடந்தது. ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடினர். மூலவர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். முன்னதாக கோயிலில் இருந்து ஐயப்பன் படம் நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தது. ஏற்பாடுகளை அர்ச்சகர் பிரசன்னா வெங்கடேசன் மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.