உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை பஞ்சமி; வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் சிறப்பு பூஜை

தேய்பிறை பஞ்சமி; வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் சிறப்பு பூஜை

நெல்லிக்குப்பம்;  நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் சப்த கன்னிகள் அருள்பாலித்து வருகின்றனர். இங்கு வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது சிறப்பாகும்.வராஹி அம்மனை தேய்பிறை பஞ்சமி நாளில் வணங்கினால் திருமண தடை நீங்கும் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு இன்று சிறப்பு யாகம் நடந்தது.அம்மனுக்கு நிகும்பலா யாகம் நடத்தி தீபாராதனை நடந்தது.வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். பூஜைகளை ராமு பூசாரி செய்தார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !