/
கோயில்கள் செய்திகள் / மார்கழி ஐந்தாம் நாள்; ஸ்ரீரங்கத்தில் தாமோதரன் திருக்கோலத்தில் உற்சவர் அருள்பாலிப்பு
மார்கழி ஐந்தாம் நாள்; ஸ்ரீரங்கத்தில் தாமோதரன் திருக்கோலத்தில் உற்சவர் அருள்பாலிப்பு
ADDED :302 days ago
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மார்கழி பாவை நோன்பின் ஐந்தாம் நான்காம் இன்று பரமபதநாதர் சன்னதியிலுள்ள கண்ணாடி அறையில் யமுனைத் துறைவன் தாமோதரன் திருக்கோலத்தில் மாயனை மன்னு வடமதுரை மைந்தனை என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்திற்கு ஏற்ப ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், உற்சவர் அருள்பாலித்தனர்.
உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் என்பது ஒரு தாய்க்கு பிள்ளை செய்ய வேண்டிய கடமை. தேவகி தாய்க்கு கண்ணனை பெற்றதால் பெருமை. "ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என்று அவள் பெருமைப்படுகிறாள். குழந்தைகள், பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என்பது இன்றைய பாசுரத்தின் உட்கருத்து.