உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவேட்டீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி; உலக நலன் வேண்டி கூட்டு பிரார்த்தனை

திருவேட்டீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி; உலக நலன் வேண்டி கூட்டு பிரார்த்தனை

திருவல்லிக்கேணி; திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோவிலில் நேற்று, இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் சார்பில், 200க்கும் மேற்பட்டோர் உழவாரப்பணியில் ஈடுபட்டனர்.  செடி, கொடிகள் அகற்றப்பட்டன. கோவிலின் இடது புறமுள்ள பெரிய தெப்பக்குளத்தில் படிந்திருந்த பாசியை அகற்றினர். மாலையில், உலக நலன் வேண்டி 5 லட்சம் மந்திரங்கள் ஓதி, கூட்டு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து, திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க, ஈசனை சுமந்து, திருமுறைகள் பாடி, அடியார்கள் புடைசூழ விழிப்புணர்வு திருவீதிவுலா நடந்தது.  இந்த திருவீதிவுலாவை கோவில் செயல் அலுவலர் கங்கா துவக்கி வைத்தார். 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !