தாடிக்கொம்பு சவுந்திராஜ பெருமாள் கோயிலில் நேத்ர தரிசனம்; பக்தர்கள் பரவசம்
ADDED :285 days ago
திண்டுக்கல்; திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்திராஜ பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழா தொடங்கி, வைகுண்ட ஏகாதசி, தேய்பிறை அஷ்டமி, சனிக்கிழமைகள் உள்ளிட்ட தினங்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். நேற்று நேத்ர தரிசன நிகழ்ச்சி நடந்தது. இந்த நேரத்தில் மட்டும் பெருமாள் பூஜைக்கு பிறகு அனைத்து ஆபரணங்கள், அலங்காரங்கள் அனைத்தும் களையப்பட்டு வேஷ்டி, உத்தரீயம் மட்டும் அணிந்து காட்சி தருவதற்கு நேத்திர தரிசனம் என்று பெயர். இதனால் பெருமாளின் முகம், கண்கள், ஆசி வழங்கும் திருக்கரங்கள் ஆகியவற்றை நம்மால் தெளிவாக காண முடியும். நேத்ர தரிசனத்தின் போது மட்டும் பெருமாள் கண் திறந்து நம்மை பார்ப்பது போல் இருக்கும். இதை பார்க்க திண்டுக்கல் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ்பாலாஜி செய்தனர்.