புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதியின் நாம சங்கீர்த்தன ஊர்வலம்
ADDED :285 days ago
புதுச்சேரி; குருமாம்பேட்டில் முக்கிய வீதிகள் வழியக நாம சங்கீர்த்தன நகர்வலம் நடந்தது. புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதியின் சார்பில், மார்கழி மாத நகர்வல நாம சங்கீர்த்தனத்தின் 10ம் நாள் நிகழ்ச்சி, குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் அமைந்திருக்கும் புத்து மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கோவிலின் தலைவர், குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வாசிகள், தர்ம சம்ரக் ஷண சமிதி நிர்வாகிகள், சங்கர வித்யாலயா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மார்கழி மாதம் முழுவதும் புதுச்சேரி நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இந்த நகர்வல நாம சங்கீர்த்தனம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, சமிதி நிர்வாகிகள் தெரிவித்தனர்.