திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதினம் வழிபாடு
ADDED :363 days ago
திண்டிவனம்; திண்டிவனத்திலுள்ள திந்திரணீஸ்வரர் கோவிலுக்கு தருமபுரம் ஆதினம் சிறப்பு வழிபாடு செய்தார்.
தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிகர் பரமாச்சாரியா சுவாமிகள் சஷ்டியத்திய பூர்த்தியை கொண்டாட உள்ளார். இதையொட்டி அவர் பிரசித்து பெற்ற அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிநாடு நடத்தி வருகிறாார். இதே போல் நேற்று காலை திண்டிவனத்தில் பழமை வாய்ந்த திந்திரிணீஸ்வரர் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு செய்தார். முன்னதாக கோவிக்கு வந்திருந்த தருமபுர ஆதினத்திற்கு சிவ கைலாய வாத்தியம் முழங்க கோயில் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.,சேதுநாதன், முன்னாள் கவுன்சிலர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.