கோதண்டராமசாமி கோயிலில் அமர்ந்த திருக்கோலத்தில் ஆஞ்சநேயர் விதியுலா
ADDED :362 days ago
பரமக்குடி; பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, ஆஞ்சநேயர் அமர்ந்த திருக்கோலத்தில் வீதி உலா வந்தார். மார்கழி மாத திருப்பள்ளியெழுச்சி மற்றும் அனுமன் ஜெயந்தி விழா நகராட்சி எதிரில் உள்ள கோதண்டராமசாமி கோயிலில் நடக்கிறது. இங்கு ஆஞ்சநேயர் புளிய மரத்தில் வீற்றிருப்பதாக ஐதீகம் உள்ளது. இதன்படி புளிய மரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து, பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று காலை அபிஷேகம் நிறைவடைந்து, மாலை புஷ்ப கேடயத்தில் ஆஞ்சநேயர் வீதி உலா வந்தார். தொடர்ந்து அனைத்துக் கோயில்களிலும் வரும் 30ல் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.