உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அனுமந்தராய சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

காரமடை அனுமந்தராய சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

கோவை; காரமடை மேற்கு மருதூரில் அனுமந்தராய சுவாமி திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா மிகவும் சிறப்பான ஒரு முறையிலே கொண்டாடப்பட்டது.


காரமடை மேற்கு மருதூரில் அனுமந்தராய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தன்னை நாடிவரும் பக்தர்களின் துயர் தீர்த்து மங்களங்கள்  வழங்குவதால் மூலவர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் என்னும் திருநாமம் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு அனுமன் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் வெண்ணை காப்பு அலங்காரத்தில் முந்திரி திராட்சை பாதாம் ஏலக்காய் கிராம்பு பேரிச்சை சாற்றிய அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து காரமடை சுற்று வட்டார பகுதி பக்தர்கள் கலந்து கொண்ட பஜனையும் அன்னதானமும் நடைபெற்றது.


* மேட்டுப்பாளையம்; அன்னூர் சாலை தாளத்துறை டிஆர்எஸ் அவன்யூ பகுதியில் உள்ள அபீஸ்ட வரத ஆஞ்சநேயர் சுவாமிக்கு பழங்களால் அலங்கரிக்கப்பட்டு சகஸ்ரநாமம் அர்ச்சனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !