உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வண்ணாரப்பேட்டை குழந்தை ஆஞ்சநேயருக்கு ஊஞ்சலாட்டி பக்தர்கள் வழிபாடு

வண்ணாரப்பேட்டை குழந்தை ஆஞ்சநேயருக்கு ஊஞ்சலாட்டி பக்தர்கள் வழிபாடு

சென்னை; வண்ணாரப்பேட்டை குழந்தை ஆஞ்சநேயருக்கு ஊஞ்சலாட்டி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசை தினமான இன்று அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அனுமன் ஜெயந்தியான இன்று பக்தர்கள் வடை மாலை வெண்ணை காப்பு, துளசி மாலை, வெற்றிலை மாலை என விதவிதமாக அலங்காரம் செய்து வழிபாடு செய்வது வழக்கம். வண்ணாரப்பேட்டையில் சோலையப்பன் தெருவில் கோதண்டராமன் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் மின் விளக்குகளாலும் , அலங்கார பூக்களாலும் விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அனுமனை வழிபட்டு சென்றனர். குழந்தை வடிவிலான அணுமனை ஊஞ்சலில் படுக்க வைத்து வழிபாடு செய்தனர். குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஊஞ்சலில் படுத்திருக்கும் அனுமனை ஊஞ்சலாட்டி வழிபட்டு வேண்டுதல் வைத்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !