உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

சின்னாளபட்டி; அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, பஞ்ச சுக்த, மகா சுதர்சன, சகஸ்ரநாம ஹோமங்கள், மூலவருக்கு பாலாபிஷேகம், புஷ்பாஞ்சலி நடந்தது. ராஜ அலங்காரத்துடன், விசேஷ பூஜைகள் நடந்தது. உற்சவர் சீதேவி, பூதேவி சமேத கோதண்டராமருக்கு, சிறப்பு அலங்காரத்துடன், அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.


* மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில், கன்னிவாடி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில், அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜைகள் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !