உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி சாரதாம்பாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

புதுச்சேரி சாரதாம்பாள் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

புதுச்சேரி; அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, சாரதாம்பாள் கோவிலில், அபய ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற லட்சார்ச்சனையை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


புதுச்சேரி நுாறடி சாலை, எல்லைப்பிள்ளைச்சாவடியில் அமைந்துள்ள சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. அதனையொட்டி, ஹோமம், 108 லிட்டர் பால் அபிஷேகத்தை தொடர்ந்து, தீர்த்தாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள அபய ஆஞ்சநேயருக்கு 10 கால லட்சார்ச்சனையும், இரவு 7:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !