ராமேஸ்வரம் டூ காஷ்மீருக்கு சனாதனம் விழிப்புணர்வு நடைபயணம்
ADDED :291 days ago
ராமேஸ்வரம்; சனாதனத்தை வலியுறுத்தி ராமேஸ்வரம் முதல் காஷ்மீர் வரை ராமர் திருவுருவப்படத்துடன் வடமாநில பக்தர்கள் நடைபயணம் துவக்கினர்.
மக்கள் ஏற்றத்தாழ்வு பாராமல் அனைவரும் சகோதரத்துவத்துடன் சனாதனம் பின்பற்றினால் உலகில் அமைதி ஏற்படும் என்பதை வலியுறுத்தி அரியானாவை சேர்ந்த ஹிந்து ரக்சா தலம் அமைப்பின் நிர்வாகி கம்மஹாத்ரி தலைமையில் உ.பி., ம.பி., ஹரியானாவை சேர்ந்த 20 பக்தர்கள் நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின் அயோத்தி ஸ்ரீ பால ராமர் திருவுருவப்படத்துடன் காஷ்மீருக்கு நடைபயணம் புறப்பட்டனர். இவர்கள் கேரளா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத், பஞ்சாப் வழியாக 4500 கி.மீ., நடந்து காஷ்மீர் செல்ல உள்ளனர். இவர்களை பா.ஜ., கட்சியினர், பொதுமக்கள் வழியனுப்பினர்.