கோவையில் கோவிந்தானந்த சரஸ்வதி சுவாமிகள் சந்திரமவுலீஸ்வரர் பூஜை
ADDED :286 days ago
கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம் நரசிபுரம் தாலுகா களக்காடு மடம் ஸ்ரீ பாலகிருஷ்ணானந்த மகா சமஸ்தானத்தின் ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தானந்த சரஸ்வதி சுவாமிகள் நேற்று கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் மகா சங்கரா மினி ஹாலுக்கு விஜயம் செய்தார். நான்கு நாட்கள் கோவையில் இருக்கும் அவர் ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரர் பூஜை நடத்துகிறார். நேற்றை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வானது வரும் ஞாயிற்றுக்கிழமை 5ம் தேதி வரை நடைபெறுகிறது.