உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் பகல் பத்து 4ம் நாள் உற்சவம்

காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் பகல் பத்து 4ம் நாள் உற்சவம்

காரமடை; வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 4 ம் நாள் சிறப்பு அலங்காரத்தில் காரமடை ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் திருவாராதனம் நடைபெற்றது. தொடர்ந்து காலை கால சந்தி பூஜை நடைபெற்று, ரங்கநாதர் வெள்ளி சிம்மாசனத்தில் கோவில் வலம் வந்து ரங்க மண்டபத்தை அடைந்தார். சேவா காலம் நிறைவு பெற்று வேத மந்திரம், மந்திர புஷ்பம், திருவாராதனம் மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !