புஷ்ப அலங்காரத்தில் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு
ADDED :630 days ago
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக துளசி மற்றும் புஷ்ப அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.