தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :287 days ago
திருப்பூர்; தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவிலில் மார்கழி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சந்தன காப்பு அலங்காரத்துடன் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.