சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை
ADDED :286 days ago
கடலுார்; கடலுார் அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். கடலுார் அடுத்த சிங்கிரிகுடியில் உள்ள புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு ஜனவரி மாதம், முதல் ஞாயிற்றுக்கிழமையில் சுற்று வட்டார பக்தர்கள், பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி, ஜனவரி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையான நேற்று, கடலுார், புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக சிங்கிரிகுடி கோவிலுக்கு சென்று, லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்தனர். சுவாமிக்கு விடியற்காலை முதல் மதியம் வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.