உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறையில் மார்கழி பஜனை; பாடல்களை பாடி வீதி வலம்

மயிலாடுதுறையில் மார்கழி பஜனை; பாடல்களை பாடி வீதி வலம்

மயிலாடுதுறை; காவேரிக் கரையில் பழமையான பாண்டுரங்கன் பஜனை மடம் அமைந்துள்ளது. மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் இறைவனின் நாமங்களை வீதிகளில் பாடி வலம் வருவது புன்னியமாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஸ்ரீகோபாலகிருஷ்ணன் பாரதி இசை விழா டிரஸ்ட் சார்பாக மார்கழி மாத வீதி பஜனை நடைபெற்றது. ஸ்ரீபாண்டுரங்கன் பஜனை மடத்தில் தொடங்கி, இரட்டை தெரு வழியாக வள்ளலார் கோவில் வீதிகள், ஒத்த தெரு, வடக்கு இராமலிங்க தெரு வழியாக மீண்டும் மடத்தை வந்தடைந்தது. ஸ்ரீகாஞ்சி சங்கர வித்யாலயா பள்ளி மாணவ மாணவிகள் பஜனை பாடல்களை பாடினர். மாலினி ஸ்ரீராம், ராமசாமி, சங்கரன், கிருஷ்ணமூர்த்தி, ரமணி, ராஜூ உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !