மார்கழி கடைசி செவ்வாய்; சந்தன காப்பில் பாலதண்டாயுதபாணி சுவாமி
ADDED :612 days ago
கோவை; பெரியநாயக்கன்பாளையம் -குப்பிச்சிபாளையம் ரோடில்டிஅமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மார்கழி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இதில் சந்தன காப்பு அலங்காரத்துடன் புஷ்ப அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.