உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு; பக்தர்கள் பரவசம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு; பக்தர்கள் பரவசம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை `சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


திருமலை திருப்பதியில் வைகுந்தவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். இன்று அதிகாலை கோவிந்தா கோஷத்துடன் வைகுந்தவாசலில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஒரு நாள் என்று இருந்ததை பக்தர்கள் வசதிக்காக பத்து நாட்கள் திறந்து வைத்துள்ளனர். 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை சொர்க்க வாசல் திறந்திருக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !