பழநி கோயில் ரூ.1 கோடி வரிபாக்கி!
ADDED :4794 days ago
பழநி: நகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.1 கோடி வரி பாக்கியை,பழநி கோயில் நிர்வாகத்திடம் வசூலிக்க வேண்டும், என, கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். பழநி நகராட்சிக்கூட்டம் தலைவர் வேலுமணி தலைமையில் நடந்தது. கவுன்சிலர்கள், "நகராட்சிக்கு சொந்தமான இடங்களை பயன்படுத்தும் பழநிகோயில் நிர்வாகம், வரி செலுத்துவதில்லை. பலகோடி வருவாய் உள்ள கோயில் நிர்வாகத்திடம், ரூ1கோடி வரியை ஏன் வசூல் செய்யவில்லை. நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் கோயில் நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது, அதற்கு அனுமதி தரக்கூடாது, என்றனர். வரிபாக்கி வசூல் செய்யப்படும். என, தலைவர் தெரிவித்தார்.