பாசிபட்டினம் தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் கோலகலம்!
ADDED :4709 days ago
தொண்டி: பாசிபட்டினம் சர்தார் நெய்னா முகமது ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று கோலகலமாக நடந்தது.இந்த தர்கா கந்தூரி விழா, நவ.,19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் மவுலீது ஓதி நார்ஷா வழங்கபட்டது. முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு 2க்கு, மானவநகரி ஸ்தானிகன்வயலில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு, பாசிபட்டினம் தர்கா வந்தடைந்தது. அனைத்து மதத்தினர் பங்கேற்றனர்.