உத்திரகோசமங்கை கோயிலில் ரூ.50 லட்சத்தில் திருப்பணி!
ADDED :4796 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில், 50 லட்ச ரூபாயில் திருப்பணிகள் நடந்து வருகிறது.இங்குள்ள சுவாமி சன்னதியை சுற்றியுள்ள அர்த்த மண்டபம் முழுமை பெறாமல் உள்ளது. இதை சீரமைப்பதற்காக, முதற்கட்டமாக அரசு, 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்தது. ஸ்தபதி வேல்முருகன் மேற்பார்வையில் அணிவெட்டு தூண்கள் செதுக்கும் பணிகள், மின்தடையால் தொய்வு ஏற்படாமல் இருக்க "ஜெனரேட்டர் மூலம் நடந்து வருகிறது.