கருட வாகனத்தில் உலா வந்த தாளக்கரை லக்ஷ்மி நரசிம்மர்
ADDED :356 days ago
அவிநாசி; வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தாளக்கரை லக்ஷ்மி நரசிம்மர் பெருமாள் கோவிலில், கருட வாகனத்தில் லக்ஷ்மி நரசிம்மர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சேவூர் அடுத்த மங்கரசு வளைய பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தாளக்கரையில் எழுந்தருளியுள்ள லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கருட வாகனத்தில் லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.