உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்; பக்தர்கள் தாிசனம்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்; பக்தர்கள் தாிசனம்

திருநெல்வேலி; நடராஜர் திரு நடனம் ஆடிய பஞ்சசபைகளில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பா் கோவில் தாமிரசபையில் இன்று அதிகாலையில் நடராஜர் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் தாிசனம் செய்தனர்.


சிவபெருமான் திரு நடனம் ஆடிய பஞ்சசபைகளில் ஒன்றான தாமிரசபை   சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற  ஸ்தலமாகிய இத் திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான மார்கழி திருவாதிரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பத்தாம் திருநாளான இன்று 13 ம் தேதி அன்று அதிகாலை  பஞ்சசபையில் ஒன்றான தாமிரசபையில் வைத்து பசு தீபாராதனையும், அதைத் தொடர்ந்து  திருவெம்பாவை பாடல்கள் பாடப்பெற்று  நடன தீபாராதனையும், தாமிரசபையில் நடராஜர் திருநடனமும் நடைபெற்றது. திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !