மூணாறு அனுமான் மலையில் 30001 மகர தீபம் ஏற்றம்
                              ADDED :289 days ago 
                            
                          
                           மூணாறு; சபரிமலையில் மகரவிளக்கு தரிசனம் போது, மூணாறில் அனுமான் மேட்டில் 30001 மகர தீபங்கள் ஏற்றப்பட்டன.
மூணாறில் உள்ள காளியம்மன் நவகிரகம் கிருஷ்ணர் கோயில் சார்பில் சபரிமலையில் மகரவிளக்கின்போது அருகில் உள்ள அனுமான்மேட்டில் மகர தீபங்கள் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி 22ம் ஆண்டை முன்னிட்டு இன்று அனுமான் மேட்டில் 30001 தீபங்கள் ஏற்றப்பட்டன. அதன்பிறகு வான வேடிக்கையும் நடந்தது. கோயிலில் லட்சுமி குபேர பூஜையும், அன்னதானமும் நடந்தது. பத்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்வம்: இந்த முறை மகர தீபம் ஏற்றுவதற்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஆர்வம் காட்டினர். அதே போல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மலை மீது சென்று மகர தீபங்களை நேரில் பார்த்து மகிழ்ந்தனர்.