தை முதல் வெள்ளி; பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :620 days ago
கோவை; பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம்ரோட்டில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் விபூதி காப்பு அலங்காரத்துடன் சர்வ புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.