உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சுவற்றில் சாய்ந்த தென்னை மரம்

ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சுவற்றில் சாய்ந்த தென்னை மரம்

திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சுவற்றில் சாய்ந்த தென்னை மரத்தை அகற்ற வலியுறுத்தப்பட்டது. திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் சுற்றுப் பிரகாரத்தில் நிறைய மரங்கள் உள்ளன. அதில் ஒரு தென்னை மரம் சில நாட்களுக்கு முன்பு கோயில் சுவர் மீது சாய்ந்தது. இது குறித்து பக்தர்கள் கூறுகையில், வேரோடு சாயந்த தென்னை மரம் கோயில் சுவற்றில் விழுந்தது. பல நாட்களாகியும் இன்னமும் அகற்றப்படவில்லை. சுவர் சேதமடைவதற்குள் மரத்தை அகற்ற அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !