உடனடி பலன் தரும் ஓடத்துறை லட்சுமி நரசிம்மருக்கு சுவாதி சிறப்பு திருமஞ்சனம்
ADDED :293 days ago
திருச்சி: காவேரி (ஆற்றங்கரை) ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சுவாதி திருமஞ்சனம் சிறப்பு சேவை நடைபெற்றது.
நரசிம்ம ஸ்தலங்கள் காட்டழகிய சிங்கபெருமாள், ஆற்றழகிய சிங்கப்பெருமாள், மேட்டழகிய சிங்கப் பெருமாள் ஆக மூன்று ஸ்தலங்களில் மிகவும் விசேஷமாக போற்றக்கூடிய ஸ்தலம் ஆகும். அதிலும் லோகமாதாவும் ஜகன் மாதாவுமான மஹாலட்சுமி தாயார் அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிப்பதால் இந்ந ஸ்தலமானது பிரார்த்தனை ஸ்தலமாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க ஆற்றழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு லட்சுமி நரசிம்மருக்கு இன்று திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு சேவையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.