அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஜன. 29 முதல் ஜூலை 24 வரை மூலவருக்கு அபிஷேகம்
ADDED :291 days ago
அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஜன. 29 முதல் ஜூலை 24 வரை மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்படாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயிலின் வழக்கப்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசை முதல் ஆடி அமாவாசை வரை மூலவர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு தைலப் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இக்காலத்தில் மூலவருக்கு பூமாலை, பரிவட்டம் சாத்துதல், அபிஷேகம், தீபாராதனை நடைபெறாது. நித்தியபடி மாலைகள், பரிவட்டம் சாத்துப்படி உள்ளிட்டவை உற்ஸவர் சுந்தரராஜ பெருமாளுக்கு மட்டும் நடைபெறும். ஜன. 29 தை அமாவாசையை முன்னிட்டு காலை 9:15 முதல் 10:15 மணிக்குள் தைலக்காப்பு சம்ப்ரோஹணம் நடக்கிறது.