ரைலோக்ய கவுரி விரதம்; விளக்கேற்றி அம்மனை வழிபட வீடு செழிக்கும்!
ADDED :281 days ago
ஆணும், பெண்ணும் சமமாக பார்க்க வேண்டும் என்பதற்காகவும், ‘சக்தி இன்றி சிவன் இல்லை என்பதை புரிய வைப்பதற்காகவும், கேதார கவுரி விரதம் கடைப்பிடிப்பதை சிவபெருமான் உணர்த்தினார். கேதாரீஸ்வரியை வணங்குவதால், நமக்கு சகல சவுபாக்கியமும் கிடைக்கும். இதனாலேயே கேதார கவுரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று ரைலோக்ய கவுரி விரதம். பதினாறு செல்வங்களையும் அருளும் 16 வடிவங்களாக கெளரிதேவி அருள்புரிகிறாள். கெளரிதேவியை வழிபடுவது அனைத்து தேவியர்களையும் வழிபடுவதற்குச் சமம். இன்று கணபதியை தாங்கி இருக்கும் கௌரியை வழிபட சந்தானப் பாக்கியம் கிட்டும். அம்மனுக்கு குங்குமார்ச்சனை செய்து வழிபட்டால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். இன்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்லி அம்பிகையை வழிபடுவது சகல நன்மையும் தரும்.