பாவம் போக்குபவன்
ADDED :225 days ago
அனாதை சிறுவனான ராம்போலா எதையும் கூர்மையாக கவனித்தான். அயோத்தியை சேர்ந்த நரஹரிதாஸ் என்னும் உபன்யாசகர், அவனது திறமையை அறிந்து சீடனாக ஏற்றார். வேத சாஸ்திரங்களை கற்றுக் கொடுத்தார். சிறுவனுக்கு உபநயனம் என்னும் பூணுால் சடங்கு நடத்தினார். பெயர் சூட்டு விழாவிற்கு ஊராரை அழைத்து, “ இந்த சிறுவன் இன்று முதல் எனக்கு மகனாக இருப்பான். மகாவிஷ்ணுவுக்கு துளசி சாத்தினால் பாவம் நீங்கும். அது போல எதிர்காலத்தில் இவன் சொல்லும் ஹரிகதைகளைக் கேட்போரின் பாவம் நீங்கும். அதனால் ‘துளசிதாஸ்’ என பெயர் சூட்டுகிறேன்” எனத் தெரிவித்தார். அந்த சிறுவனே துளசி ராமாயணத்தை எழுதி அழியாப் புகழ் பெற்றார்.