சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை தேரோட்டம் கோலாகலம்
ADDED :299 days ago
கன்னியாகுமரி; சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை - திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி, தை ஆகிய மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தைத்திருவிழா ஜன.,1லோ் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, இரவு வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடந்து வந்தது. 10ம் திருவிழாவான நேற்று 26ம் தேதிஇரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனி நடைபெற்றது. தொடர்ந்து, 11ம் விழாவான இன்று 27ம் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து திருக்கொடி இறக்கம் நடக்கிறது.