நெல்லை கோயில்களில் ராகு-கேது பெயர்ச்சி விழா
ADDED :4804 days ago
திருநெல்வேலி: நெல்லை கோயில்களில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதைமுன்னிட்டு நவக்கிரக சன்னதியில் சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தன. வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு துலாம் ராசிக்கும், கேது மேஷ ராசிக்கும் நேற்று காலை 10.36 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதைமுன்னிட்டு பாளை.,ராகுபகவான் கோயிலில் மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மிருத்யுஞ்ஜய ஹோமம், சுதர்சன ஹோமம், வலம்புரி சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் அர்ச்சனை நடந்தது. இதுபோல் நெல்லையப்பர் கோயில், கைலாசநாதர் கோயில், பாளை.,சிவன் கோயில்களில் உள்ள நவக்கிரக சன்னதியில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. பக்தர்கள் தங்களது ராசிக்கு அர்ச்சனை செய்து நவக்கிரகங்களை வழிபட்டனர். புட்நோட்: ராகு,கேது பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ராகுபகவான் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.