காளஹஸ்தி சிவன் கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சுவாமி தரிசனம்
ADDED :296 days ago
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு இன்று, இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் மற்றும் இஸ்ரோ ஊழியர்கள சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்களுக்கு கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். நாளை நடைபெறவிருக்கும் ராக்கெட் ஏவுதலின் வெற்றிக்காக ஞானப் பிரசூனாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரரை பிரார்த்தனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் ஹரி யாதவ், கோயில் ஆய்வாளர் சுப்பிரமணியம் யாதவ், பி.ஆர்.ஓ. ரவி மற்றும் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.