உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குற்றாலத்தில் குவிந்த பக்தர்கள்; புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

குற்றாலத்தில் குவிந்த பக்தர்கள்; புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தென்காசி; தை அமாவாசையை முன்னிட்டு குற்றாலம் அருவியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யது மக்கள் வழிபட்டனர்.


ஆடி அமாவாசை மஹாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்களில் பொதுமக்கள் அருவிகள், ஆறு மற்றும் கடலில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வாடிக்கை. இன்று தை அமாவாசையை முன்னிட்டு தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடி பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக குற்றாலம் மெயின் அருவி கரையில் குவிந்தனர் பின்னர் அருவியில் புனித நீராடி புரோகிதர்களிடம் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். குற்றாலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !