உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை பூம்புகாரில் தை அமாவாசை தர்ப்பணம்; ஏராளமானோர் வழிபாடு

மயிலாடுதுறை பூம்புகாரில் தை அமாவாசை தர்ப்பணம்; ஏராளமானோர் வழிபாடு

மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் தை மாத அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர்  கடலில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். இறந்த தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பது அவசியம். முன்னோர் இறந்த தேதி, மகாளய பட்சம், ஆடி, தை அமாவாசை நாட்களில்  வீடு அல்லது நதிக்கரைகள்,  கடற்கரைகளில் திதி கொடுப்பதன் மூலம் அவர்களது ஆசி கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். முன்னோர்களுக்கு திதி கொடுக்காதவர்கள் தை அமாவாசையில் திதி கொடுத்தால் செல்வம் பெருகி குடும்ப நிலை உயரும், குழந்தைகள் கல்வி பெற்று பெருவாழ்வு பெறுவர். தை அமாவாசையான இன்று மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் காவேரி சங்கமத் துறையில் ஏராளமானோர் புனித நீராடி வேத விற்பன்னர்கள் மற்றும் ஆச்சாரியார்கள் வழிகாட்டுதலின்படி தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்து அரிசி, காய்கறிகள், தானியங்களை தானமாக கொடுத்து வழிபாடு நடத்தினர். 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !