உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை அமாவாசை; முன்னோருக்கு நன்றி.. நீர்நிலைகளில் அலைமோதிய மக்கள்.. கோவில்களில் சிறப்பு வழிபாடு

தை அமாவாசை; முன்னோருக்கு நன்றி.. நீர்நிலைகளில் அலைமோதிய மக்கள்.. கோவில்களில் சிறப்பு வழிபாடு

மதுரை; தை முதல் ஆனி மாதம் வரை உத்ராயண புண்ணிய காலமாகும். இதில் மகர ராசியில் சூரியனுடன், சந்திரன் இணையும் நாளான தை அமாவாசை முன்னோர் வழிபாட்டுக்குரியது. இந்நாளில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோடியக்கரை, குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட புனித தலங்களில் நீராடி முன்னோரை நன்றியுடன் வழிபட, அவர்களின் ஆசி உண்டாகும். தந்தையை குறிக்கும் கிரகம் சூரியன் என்பதால் பிதுர் காரகர் என்றும், தாயைக் குறிக்கும் கிரகம் சந்திரன் என்பதால் மாதுர் காரகர் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. அமாவாசை நாளில் மறைந்த முன்னோர், பெற்றோரை வழிபடுவது பிள்ளைகளின் கடமையாகும்.


இந்நாளில் மதுரை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோடியக்கரை, குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட புனித தலங்களில் லட்சக்கணக்கான மக்கள் நீராடி முன்னோரை வழிபட்டனர். தமிழகத்தின் புகழ்பெற்ற சிவஸ்தலமான சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்க சுவாமி கோயில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தை அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் செய்து, திதி கொடுக்க  குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் தை அமாவாசை திதையொட்டி பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.  தை அமாவாசையான இன்று தீர்த்தக்கரைகளில் நீராடி, மறைந்த முன்னோர், பெற்றோருக்கு தர்ப்பணம் கொடுப்பதும், காகத்திற்கு உணவு அளிப்பது, பசுவுக்கு கீரை, பழம் கொடுப்பது, அன்னம், ஆடை தானம் செய்வது சிறப்பு. கோவில்களில் நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !