உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பொள்ளாச்சி ; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது.


ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வரும் அமாவாசையையொட்டி மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா வெகுவி மரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இன்று  காலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் கோவில் முன்புள்ள கொடிக்கம்பத்தில் குண்டம் திருவிழாவிற்க்கான கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வரும் 11ம் தேதி இரவு 1 மணிக்கு மயான பூஜையும், 12ம் தேதி காலை 10.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30க்கு மகா பூஜை நடக்கிறது. 13ம் தேதி இரவு குண்டம் பூ வளர்க்கப்பட்டு, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் 14ம் தேதி காலை  7 மணிக்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !