உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் அமாவாசை விழா

திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் அமாவாசை விழா

நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் தை மாத அமாவாசை விழா நடந்தது.இதையொட்டி முருகபெருமானுக்கு பால், பழம், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.ராஜாங்க திருக்கோலத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது.மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் அமாவாசையை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதையொட்டி சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் ஏராளமான முருகபக்தர்கள் கலந்துகொண்டு நெய்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !