உத்தரவை காமாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :617 days ago
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே உத்தரவையில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஜன., 29 அன்று முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. மூலவர்கள் காமாட்சியம்மன், சேதுமா காளியம்மன், பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.