ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் நந்தவனம்; திருப்பணிக்கு பூஜை
ADDED :284 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் அவரது அவதார ஸ்தலமான நந்தவனத்தின் திருப்பணிக்கான பூமிபூஜை, நேற்று காலை நடந்தது. இதனை முன்னிட்டு சதீஷ் பட்டர், மணியம் கோபி பூமிபூஜைகள் செய்தனர். நிகழ்ச்சியில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், உபயதாரர் கனகராஜ் மற்றும் பிரேம்குமார், முரளிதரன், கோயில் பட்டர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.