காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் ரதசப்தமி விழா
ADDED :317 days ago
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ரதசப்தமி விழா நடந்தது. கோவிலில் இன்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், 8:30 மணிக்கு கெடிலம் ஆற்றில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடந்தது. பகல் 12:30 மணிக்கு விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பரமணியர், காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர், சண்டிகேஸ்வரர், அம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், இரவு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் விழாக்குழவினர் செய்திருந்தனர்.