செல்வ விநாயகர் கோவிலில் சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :267 days ago
கோவை; செல்வ விநாயகர் கோவிலில் அமைந்துள்ள சூரிய பகவானுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
தை அமாவாசை அடுத்த ஏழாம் நாள் வரும் சப்தமி திதியானது ரதசப்தமி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் சூரியனின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது.சூரிய பகவானின் தெற்கு நோக்கிய தனது தக்ஷிணாயன பயணத்தை, வடதிசை நோக்கி பயணிக்கும் நாள் ரத சப்தமி நாளாக கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் வரும் ரத சப்தமியை முன்னிட்டு கோவை ஆர். எஸ். புரம் பொன்னைய ராஜபுரம், செல்வ விநாயகர் கோவிலில் அமைந்துள்ள சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சூரிய பகவான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.