மயிலம் முருகன் கோவிலில் தை கிருத்திகை விழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்
ADDED :213 days ago
மயிலம்; மயிலம் முருகன் கோவிலில் தை மாத கிருத்திகை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தது. 11:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் கிரிவலம் நடந்தது. தை கிருத்திகை என்பதால் வெளி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.