தை கடைசி வெள்ளி; பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :607 days ago
கோவை; கோவை பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் மூலவர் சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.