ஆதி மாசாணி அம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :299 days ago
சோழவந்தான்; சோழவந்தான் அருகே கோவில் குருவித்துறையில் ஆதி மாசாணி அம்மன் கோயில் 7ம் ஆண்டு கொடியேற்று விழா ஜன.,29ல் துவங்கியது. பிப்.,5 நள்ளிரவு மயான பூஜையும், 6ல் வைகை ஆற்றில் இருந்து அம்மன் சக்தி கரகம் எடுத்து கோயில் வருதல், அம்மன் கண் திறக்கும் விழா நடந்தது. காப்பு கட்டி விரதம் இருந்து பக்தர்கள் இன்று பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் நடந்தது. நாளை (பிப்.,8) கொடியிறக்கத்தை தொடர்ந்து முளைப்பாரி, சக்தி கரகம் ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைத்தல், கருப்புசாமி, மகா முனிஸ்வரர் பூஜை நடக்கிறது. விழா நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினை செய்திருந்தனர்.